/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் கட்டண வசூல் செயலர்களுக்கு 'கிடுக்கி'
/
குடிநீர் கட்டண வசூல் செயலர்களுக்கு 'கிடுக்கி'
ADDED : பிப் 16, 2025 02:47 AM
வீரபாண்டி: வீரபாண்டி ஒன்றியத்தில், 25 ஊராட்சி செயலர்களுக்கும், வரி, கட்டண பாக்கிகளை வசூலிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் கீரைபாப்பம்பாடியில், 1.65 சதவீதம், மூடுதுறை, 2.58, உத்தமசோழபுரம், 3.44, ராக்கிப்பட்டி, 3.92, பெருமாம்பட்டி, 4.73, ஆரிகவுண்டம்பட்டி, 5.61, பெரிய சீரகாபாடி, 6.12, முருங்-கப்பட்டி, 6.33, மருளையம்பாளையம், 6.93, சென்னகிரி, 8.62, ராஜாபாளையம், 8.68, வீரபாண்டி, 8.77 சதவீதம் மட்டும் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த, 12 ஊராட்சி செயலர்களும், நாளைக்குள், 75 சதவீத குடிநீர் கட்டணத்தை வசூ-லித்திருக்க வேண்டும். இல்லை எனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என, கமிஷனர் எச்சரித்துள்ளார். மேலும், 25 ஊராட்சிகளிலும், மார்ச், 31க்குள், 100 சதவீத குடிநீர் கட்டணம் வசூலிக்க, தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

