ADDED : ஆக 20, 2026 03:07 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர் ஆர்.எஸ்., ரயில்வே கேட் அருகே காடையாம்பட்டி திட்ட பிரதான குழாயில், கடந்த, 17ல் உடைப்பு ஏற்பட்டது. இதனால் காடையாம்பட்டி சுற்றுப்பகுதிகளுக்கு குடிநீர் வினி-யோகம் பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் குடிநீர் வாரிய ஊழியர்கள், சீரமைப்பு பணியை தொடங்கினர். அதில் பழமையான குழாயை மாற்றம் செய்து, அதற்கு பதில், 20 அடி நீளம் கொண்ட, புது குழாயை வெல்டிங் வைத்து பொருத்தி சீரமைத்தனர். தொடர்ந்து இரு நாட்-களுக்கு பின், நேற்று அதிகாலை முதல், குடிநீர் வினியோகம் தொடங்கியது.
