ADDED : ஆக 20, 2026 03:07 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் சிங்கப்பெண்கள் படை பிரிவு போலீசாருக்கு, ஒரு வார பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது. 2ம் நாளாக நேற்று நடந்தது.
மாலை, அப்பிரிவு ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமை வகித்து, பெண் எஸ்.ஐ., - ஏட்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதற்கு சிங்க பெண் படை பிரிவு போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவ-டிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.
மேட்டூர் பயிற்சி பள்ளி எஸ்.பி., பழனியப்பன், சிங்கப்பெண்கள் சிறப்பு படை டி.எஸ்.பி., சங்கீதா உடனிருந்தனர். இப்பயிற்சி வரும், 25 வரை நடக்கிறது. இதில், கோவை மேற்கு மண்டலத்தை சேர்ந்த கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ண-கிரி, சேலம், கோவை மாநகரை சேர்ந்த, பெண் எஸ்.ஐ., - ஏட்-டுகள், 90 பேர் பங்கேற்றனர்.
