தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/உயர்மின் கோபுரத்தில் ஏறி டிரைவர் போராட்டம்

உயர்மின் கோபுரத்தில் ஏறி டிரைவர் போராட்டம்

உயர்மின் கோபுரத்தில் ஏறி டிரைவர் போராட்டம்


ADDED : அக் 21, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜலகண்டாபுரம்:ஜலகண்டாபுரம், செலவடை அருகே வசிப்பவர் அண்ணாமலை, 34. லாரி டிரைவர். இவரது மனைவி ரம்யா, 30. இரு ஆண்டுக்கு முன் குடும்ப பிரச்னையில், ரம்யா பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அண்ணாமலை, 'என் மனைவியிடம், 9 பவுன் நகை, பணம் உள்ளது. அதை பெற்றுத்தர வேண்டும்' எனக்கூறி, நேற்று மதியம், 2:30 மணிக்கு செலவடை பஸ் ஸ்டாப் அருகே உள்ள, உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். மக்கள் திரண்டனர். அங்கு வந்த ஜலகண்டாபுரம் போலீசார், அண்ணாமலையிடம் பேச்சு நடத்தி, அரை மணி நேரத்துக்கு பின் அவரை பத்திரமாக இறக்கினர். பின் அவரை எச்சரித்து, குடும்ப பிரச்னையை முறையாக தீர்த்துக்கொள்ள அறிவுரை வழங்கி அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us