ADDED : அக் 21, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
பெத்தநாயக்கன்பாளையம்:ஏத்தாப்பூர்
முத்து மலை முருகன் கோவிலில், 146 அடி உயரத்தில் விஸ்வரூப முருகன்
சிலை உள்ளது. அங்கு புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.
சிவலிங்கம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தியான
மண்டபம் முழுதும் வண்ணம் தீட்டப்பட்டு, வரும், 25ல் கும்பாபிேஷக விழா
நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக தலைவர் ஸ்ரீதர்
உள்ளிட்ட விழா குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில்
நேற்று, வாழப்பாடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில் போலீசார், விழா
ஏற்பாடு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
