/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி
/
பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி
ADDED : மே 30, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம் :இடைப்பாடி, இருப்பாளி காட்டுவளவை சேர்ந்தவர் சண்முகம், 27 லாரி டிரைவரான இவர், உறவினரை அழைத்துக்கொண்டு, 'ரேடன்' பைக்கில் நேற்று முன்தினம் ஓமலுார் சென்றார். பின் அவரை விட்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். மாலை, 6:30 மணிக்கு சிக்கம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் வந்தபோது நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் அடிபட்டது.
மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்தது தெரியவந்தது. சண்முகம் மனைவி யசோதா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.