/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேன் டயரை கழற்றிய டிரைவர் பரிதாப பலி
/
வேன் டயரை கழற்றிய டிரைவர் பரிதாப பலி
ADDED : பிப் 04, 2025 06:34 AM
சேலம்: ஓமலுார், செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 40. இவர், ரவிச்சந்திரன் என்ற கான்ட்ராக்டரிடம் டிரைவராக பணிபு-ரிந்து வந்தார். நேற்று முன்தினம், சூரமங்கலம் அருகே ஓட்டலில் உணவு எடுத்து செல்வதற்காக, வேனில் முருகேசன் வந்துள்ளார். அப்போது சூரமங்கலம் தனியார் பள்ளி அருகே வந்த போது, வேனின் டயர் பஞ்சரானது. இது குறித்து முருகேசன் தனது உற-வினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு,
வேனை சாலை-யோரம் நிறுத்தி டயரை கழற்றும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவரது உறவினர் வந்து
பார்த்தபோது, அமர்ந்த நிலையில் முரு-கேசன் உயிரிழந்தது தெரியவந்தது. சூரமங்கலம் போலீசார் அவ-ரது
உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

