/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெஞ்சு வலி ஏற்பட்ட டிரைவர் உயிரிழப்பு
/
நெஞ்சு வலி ஏற்பட்ட டிரைவர் உயிரிழப்பு
ADDED : ஆக 01, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, இடைப்பாடியை சேர்ந்தவர் செல்வம், 47. தனியார் பஸ் டிரைவரான இவர் நேற்று முன்தினம், 'விஜயலஷ்மி' பஸ்சை, சேலத்தில் இருந்து இடைப்பாடி நோக்கி ஓட்டிச்சென்றார். காகாபாளையம் அருகே சென்றபோது நெஞ்சு வலியால் டிரைவர் துடிக்க, பஸ் சர்வீஸ் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் மோதியது.
மகுடஞ்சாவடி போலீசார், டிரைவரை மீட்டு சீரகாபாடி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பயணியர் உயிர் தப்பினர். ஆனால் நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனையில் செல்வம் உயிரிழந்தார்.

