/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி
/
நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி
ADDED : ஜூலை 16, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜகுரு அம்பேத்கர். இவர், சரக்கு வாகனத்தில் மீன்களை ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார். மாற்று டிரைவராக, புதுச்சேரியை சேர்ந்த அசோக்ராஜ், 38, சென்றார்
. நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, சேலம், கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே வந்தபோது, ராஜகுரு, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியுள்ளார். இதில் அசோக்ராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ராஜகுரு தப்பினார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.