/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவருக்கு நெஞ்சுவலி: பஸ் பயணியர் தப்பினர்
/
டிரைவருக்கு நெஞ்சுவலி: பஸ் பயணியர் தப்பினர்
ADDED : ஜூலை 31, 2025 02:03 AM
மகுடஞ்சாவடி, இடைப்பாடியை சேர்ந்தவர் செல்வம், 47. தனியார் பஸ் டிரைவரான இவர், நேற்று மாலை, 'விஜயலஷ்மி' பஸ்சை, சேலத்தில் இருந்து இடைப்பாடி நோக்கி ஓட்டிச்சென்றார். 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். மாலை, 6:45 மணிக்கு, காகாபாளையம் அருகே சென்றபோது, செல்வத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு துடிதுடித்தார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சர்வீஸ் சாலையோரம் இருந்த சிறு வேப்ப மரத்தில் மோதி நின்றது. பஸ்சின் முன்புறம் சேதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மகுடஞ்சாவடி போலீசார், செல்வத்தை மீட்டு, சீரகாபாடி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணியர் தப்பினர். பின் அவர்கள், மாற்று பஸ்சில் சென்றனர்.