/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரட்டிப்பு பண மோசடி விவகாரத்தில் டிரைவர் கணக்கில் ரூ.84 லட்சம் முடக்கம்
/
இரட்டிப்பு பண மோசடி விவகாரத்தில் டிரைவர் கணக்கில் ரூ.84 லட்சம் முடக்கம்
இரட்டிப்பு பண மோசடி விவகாரத்தில் டிரைவர் கணக்கில் ரூ.84 லட்சம் முடக்கம்
இரட்டிப்பு பண மோசடி விவகாரத்தில் டிரைவர் கணக்கில் ரூ.84 லட்சம் முடக்கம்
ADDED : ஜன 30, 2025 02:45 AM
சேலம்:பணம் இரட்டிப்பு தருவதாக மோசடி செய்த விவகாரத்தில்,அறக்கட்டளை பெண் நிர்வாகிக்கு டிரைவராக இருந்தவரின் வங்கி கணக்கில், 84 லட்சம் ரூபாய்இருந்ததால், அந்த கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.
சேலம், அம்மாபேட்டை, சிவகாமி திருமண மண்டபத்தில், புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை, வேலுாரைச் சேர்ந்தவிஜயபானு, 48, என்பவர் நடத்தினார்.
அங்கு பணம் இரட்டிப்பாக தருவதாகக் கூறி, ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் முதலீடு பெறப்பட்டது.
பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் சோதனை செய்து, அங்கீகாரம் இல்லாத திட்டத்தில், முறைகேடாக பெறப்பட்ட 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கரை கைது செய்து, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து விஜயபானுவின் உதவியாளர் மற்றும் டிரைவரான, வேலுாரைச் சேர்ந்த சையத் மஹ்மூதை கைது செய்து, அவர் ஓட்டிய வேனை பறிமுதல் செய்தனர்.
அவரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், 84 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வங்கி கணக்கை நேற்று போலீசார் முடக்கினர். கைதான பாஸ்கர், பெத்தநாயக்கன்பாளையத்தில் பல கோடி ரூபாய்க்கு நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தலைமறைவாக உள்ள அறக்கட்டளை நிர்வாகிகளான செந்தில், அவரது மனைவி ஜான்சி உட்பட மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.

