/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவர் மண்டை உடைப்பு; 2 பேர் கைது; 2 பேருக்கு வலை
/
டிரைவர் மண்டை உடைப்பு; 2 பேர் கைது; 2 பேருக்கு வலை
டிரைவர் மண்டை உடைப்பு; 2 பேர் கைது; 2 பேருக்கு வலை
டிரைவர் மண்டை உடைப்பு; 2 பேர் கைது; 2 பேருக்கு வலை
ADDED : ஜன 17, 2025 06:17 AM
வீரபாண்டி: வீரபாண்டி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கதிரவன், 32. 'ஆக்டிங்' டிரைவரான இவர், தொ.மு.ச., சங்கத்தில், வீரபாண்டி துணை செயலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு சீரகாபாடி பஸ் ஸ்டாப் அருகே டீக்கடைக்கு சென்றார். அங்கு கதிரவனின் நண்பரான, கல்பாரப்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கோகுல்ராஜ், 23, டீ குடித்துக்கொண்டிருந்தார்.
அவர்கள் பேசிக்கொண்ட நிலையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோகுல்ராஜின் நண்பர்களான, கல்பாரப்பட்டியை சேர்ந்த கார்த்திக்குமார், 24, அருண், 23, சுகுமார், 25, மணிகண்டன், 22, ஆகியோர் சேர்ந்து கதிரவனை பிளாஸ்டிக் சேர்களால் தாக்கினர். தலை, முகத்தில் படுகாயம் அடைந்த கதிரவனை, மக்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கதிரவன் புகார்படி ஆட்டையாம்பட்டி போலீசார் கார்த்திக்குமார், அருணை கைது செய்து, சுகுமார், மணிகண்டனை தேடுகின்றனர்.