/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார் வட்டாரத்தில் 6 மாதங்களில் 208 பேரின் ஓட்டுனர் உரிமம் 'சஸ்பெண்ட்'
/
ஆத்துார் வட்டாரத்தில் 6 மாதங்களில் 208 பேரின் ஓட்டுனர் உரிமம் 'சஸ்பெண்ட்'
ஆத்துார் வட்டாரத்தில் 6 மாதங்களில் 208 பேரின் ஓட்டுனர் உரிமம் 'சஸ்பெண்ட்'
ஆத்துார் வட்டாரத்தில் 6 மாதங்களில் 208 பேரின் ஓட்டுனர் உரிமம் 'சஸ்பெண்ட்'
ADDED : அக் 08, 2025 01:35 AM
ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துார் வட்டாரத்தில், 6 மாதங்களில் விதிமீறலில் ஈடுபட்ட, 208 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறியதாவது:
ஆத்துார், வாழப்பாடி பகுதிகளில், கடந்த ஏப்ரல் முதல், செப்டம்பர் வரை மேற்கொண்ட ஆய்வில், வரி செலுத்தாதது, தகுதிச்சான்று, காப்பு, புகைச்சான்று புதுப்பிக்காதது, அனுமதி சீட்டு இல்லாதது உள்ளிட்ட விதிமீறலால், 234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றிச்சென்ற, 120 வாகனங்கள், அதிக பாரம் ஏற்றியது, 84, அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கியது, 38, தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கியது, 174, காப்புச்சான்று இல்லாதது, 245, சிவப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாதது, 139, சிவப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாதது, 100 என, 1,134 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு ஏற்படுத்திய, 56 டிரைவர்கள், போக்குவரத்து விதிகளை மீறிய, 152 டிரைவர்கள் என, 208 பேரின் ஓட்டுனர் உரிமம், தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர சாலை வரி, விதிமீறிய வாகனங்களுக்கு இணக்க கட்டணம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக, ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலக பகுதியில், 2.92 கோடி ரூபாய் வசூலித்து அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
75 பேரின்'லைசென்ஸ்' ரத்து
சேலம் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி என, 7 வட்டார போக்குவரத்து அலுவலகம், ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூர் என, 4 பகுதி நேர அலுவலகம் உள்ளன. இந்த, 11 அலுவலக பகுதிகளில், கடந்த செப்டம்பரில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், சாலை விதிகளை மீறிய, 75 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிக ரத்து செய்தனர்.