/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 68 கடைகளில் விதை விற்க தடை
/
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 68 கடைகளில் விதை விற்க தடை
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 68 கடைகளில் விதை விற்க தடை
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 68 கடைகளில் விதை விற்க தடை
ADDED : அக் 08, 2025 01:36 AM
சேலம், சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தலைமையில் குழுவினர், கடந்த செப்டம்பரில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், அதிகம் விற்பனையாகும், 734 கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது, 955 மாதிரிகள் எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்பியதில், 43 விதை மாதிரிகளில் முளைப்புத்திறன் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விதைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 68 விற்பனை நிலையங்களில், விதை விற்க, 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில், 62 கடைகள் அடங்கும். அதன்படி தலைவாசலில், 21, சங்ககிரியில், 19, ஓமலுாரில், 9 சேலத்தில், 7, ஆத்துாரில், 6 கடைகள் ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தில், 6 கடைகளில் விதை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில், திருச்செங்கோட்டில், 4, நாமக்கல்லில், 2 கடைகள் அடங்கும். அதன்மூலம், 51.43 லட்சம் ரூபாய் மதிப்பில், 11.24 டன் அளவில் விதைகள் முடக்கப்பட்டுள்ளன.