/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 09, 2025 02:22 AM
வாழப்பாடி, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி, வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 26ல் விளையாட்டு போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கருத்தரங்கு, நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புகழ் தலைமை வகித்தார். அதில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கருத்தரங்கம் நடந்தது. பின் மாணவர்கள், பள்ளியில் இருந்து, வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் வரை, போதை பொருள் ஒழிப்பு குறித்து, பதாகை
கள் ஏந்தி பேரணியாக சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமை ஆசிரியர் ராஜா
உள்ளிட்ட ஆசிரியர்கள்
பங்கேற்றனர்.