/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'போதை' கும்பல் முகாம் பெண்கள், மாணவியர் அச்சம்
/
'போதை' கும்பல் முகாம் பெண்கள், மாணவியர் அச்சம்
ADDED : மே 01, 2024 07:30 AM
பனமரத்துப்பட்டி: சேலம் - பனமரத்துப்பட்டி சாலையில் இருந்து பிரிந்து, நத்தமேடு, சந்தியூர் ஆட்டையாம்பட்டி வழியே சேலம் - திருச்சி நெடுஞ்சாலையில் இணையும் சாலை உள்ளது. அதில் காந்தி நகர் மயானம் அருகே ஆல, அரச மரங்கள் உள்ளன. அங்கு மாலையில் ஏராளமான இளைஞர்கள் முகாமிட்டு மது உள்ளிட்ட போதை பொருட்கள் குடிக்கும் இடமாக மாற்றிவிட்டனர்.
குறும்பர் தெரு சாலை, நத்தமேடு ஏரிக்கரை பகுதியிலும், 'குடி'மகன்கள் நள்ளிரவு வரை கும்மாளமிடுகின்றனர். மேலும், போதை பொருட்கள் கை மாறும் இடமாகவும் மாறியுள்ளது. மக்கள் நடமாடும் சாலையிலேயே, இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் ஆகியவற்றை நிறுத்தியபடியே குடிக்கின்றனர். இதனால் மாலையில் அந்த வழியே செல்லும் பெண்கள், டியூசன் முடிந்து செல்லும் மாணவியர் அச்சத்துக்கு ஆளாகின்றனர். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளதால் அங்கு முகாமிடும் கும்பலை நிரந்தரமாக விரட்ட, போலீசார் நடவடிக்கை எடுக்க, மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.