ADDED : அக் 24, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அம்மாபேட்டை ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. அதில் என்.சி.சி., தரைப்படை, விமானப்படை
பிரிவில் உள்ள, 190 மாணவர்கள், நுழைவாயிலில் போதை தடுப்பு முழக்கங்களை எழுப்பி, பெற்றோர், மாணவர்கள், மக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி முதல்வர் சேசுராஜ், தமிழ்நாடு, 12வது பட்டாலியன் சேலம் அவில்தார் கோச், என்.சி.சி., அலுவலர்கள் அருள், ஆப்ரகாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.