/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதைப்பொருள் தடுப்பு மாணவருக்கு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் தடுப்பு மாணவருக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 17, 2024 07:13 AM
தலைவாசல் : ஆத்துார் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம், தலைவாசல் அருகே வீரகனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., சென்னைகேசவன் தலைமையில் போலீசார், மது, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, உடல் சார்ந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுபிரசுரம் வழங்கினர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள், போதை பொருள் பாதிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி, வீரகனுார் பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக சென்றனர். தலைமை ஆசிரியர் முருகேசன், போதை பொருள் விழிப்புணர்வு பொறுப்பு ஆசிரியர் அன்பழகன், ஆசிரியர்கள், வீரகனுார், மதுவிலக்கு பிரிவு போலீசார் பங்கேற்றனர்.