/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்
ADDED : ஆக 22, 2025 01:23 AM
நாமக்கல், நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், போதை பொருள் தடுப்பு குழு, யூத் ரெட் கிராஸ், சாலை பாதுகாப்பு மன்றம் மற்றும் உடற்கல்வித்துறை ஆகியவை சார்பில், 'போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மினி மாரத்தான்' போட்டி நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் எஸ்.பி., (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) தனராசு, மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கல்லுாரியில் தொடங்கிய மினி மாரத்தான், கால்நடை மருத்துவக் கல்லுாரி வரை சென்று, பின் மீண்டும் கல்லுாரி வளாக நுழைவாயிலில் நிறைவடைந்தது. மாணவர் பிரிவில் தாமரைக்கண்ணன் முதலிடம், முத்து இரண்டாமிடம், நவப்பிரதாப் மூன்றாமிடம் பெற்றனர். மாணவியர் பிரிவில் பிரியதர்ஷினி முதலிடம், சினேகா இரண்டாமிடம், சாந்தி மூன்றாமிடம் பெற்றனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், போதை தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு மன்ற மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, விலங்கியல் துறை தலைவர் ராஜசேகர பாண்டியன், உடற்கல்வி இயக்குனர் கார்த்திக், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

