/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் கல்லுாரி விடுதியில் போதை பொருள் சோதனை
/
தனியார் கல்லுாரி விடுதியில் போதை பொருள் சோதனை
ADDED : செப் 28, 2024 01:22 AM
தனியார் கல்லுாரி விடுதியில்
போதை பொருள் சோதனை
ஓமலுார், செப். 28-
தனியார் கல்லுாரி விடுதிகளில், டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார் போதை பொருள் உள்ளதா என சோதனை நடத்தினர்.
ஓமலுார் போலீஸ் சப்-டிவிஷனுக்குட்பட்ட, தனியார் கல்லுாரி விடுதிகளில் நேற்று மாலை, திடீர் சோதனை நடத்தப்பட்டது. பூசாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி விடுதியில், 200 மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர். அங்கு ஓமலுார்
டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார் சோதனையிட்டனர். பின், மாணவ, மாணவியர் மத்தியில் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், தற்காத்து கொள்ளுதல், சட்ட ரீதியான தண்டனை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, ஓமலுார் சிக்கனம்பட்டியில் உள்ள கல்லுாரி மாணவர் விடுதியிலும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஓமலுார் எஸ்.ஐ., சையது முபாரக் மற்றும் போலீசார்
உடனிருந்தனர்.