/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முருங்கைக்காய் கிலோ 100 ரூபாயாக உயர்வு
/
முருங்கைக்காய் கிலோ 100 ரூபாயாக உயர்வு
ADDED : அக் 02, 2025 01:56 AM
ஆத்துார், முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிலோ, 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு, நாட்டு ரகம், செடி முருங்கை, ஒட்டு ரகம் உள்ளிட்ட முருங்கைக்காய்கள் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், முருங்கைக்காய் வரத்து அதிகளவில் இருந்ததால், கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானது.
இம்மாதம் முருங்கை வரத்து குறைந்துள்ளது. கடந்த, இரு வாரங்களுக்கு முன் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கிலோ, 60 ரூபாயும், சில்லறை விற்பனையாக, 70 ரூபாயாக இருந்தது. கடந்த வாரத்தில் கிலோ 80 ரூபாய், உழவர் சந்தை மற்றும் சில்லறை விற்பனை கடைகளில், கிலோ, 90 ரூபாயாக விற்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஆயுத பூஜை நாளில், முருங்கைக்காய் வரத்து குறைந்ததால், தலைவாசல் மார்க்கெட்டில் கிலோ, 90 ரூபாய், உழவர் சந்தை மற்றும் சில்லறை விற்பனை கடைகளில், கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது.