/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பரிதாப பலி
/
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பரிதாப பலி
ADDED : அக் 02, 2025 01:57 AM
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தென்னம்பிள்ளையூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மணி, 70. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார்.
இந்நிலையில் நேற்று காலை, 8:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சடலமாக கிடப் பதாக ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், ஆத்துார் தீயணைப்பு துறையினர் உதவியுடன், மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் கூறுகையில்,'மது
போதையில் அப்பகுதியில் மணி நடந்து சென்ற போது தவறி விழுந்து, கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது,' என்றனர்.