/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.8,000 லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளர் கைது
/
ரூ.8,000 லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளர் கைது
UPDATED : டிச 20, 2025 01:06 PM
ADDED : டிச 20, 2025 07:04 AM

சேலம்: சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சுகந்தி, 33. இவர் புதிதாக கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு, அருகே உள்ள கோரிமேடு மின் உதவி பொறியாளர் அலுவல-கத்தில் விண்ணப்பித்தார்.
இணைப்பு வழங்க தாமதமானதால், அலுவலகம் சென்று, வணிக ஆய்வாளரான, கருப்பூரை சேரந்த இளையராஜா, 45, என்பவ-ரிடம் கேட்டார். அவர், 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதிர்ச்சி அடைந்த சுகந்தி, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
தொடர்ந்து அவர்கள் அறிவுரைப்படி, நேற்று சுகந்தி, ரசாயனம் தடவிய, 8,000 ரூபாயை, அலுவலகத்தில் வைத்து இளையராஜாவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் போலீசார், இளையராஜாவை கைது செய்து, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

