/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தங்கம் வேர்ல்ட் பள்ளியில் கல்வி அறிவியல் கண்காட்சி
/
தங்கம் வேர்ல்ட் பள்ளியில் கல்வி அறிவியல் கண்காட்சி
தங்கம் வேர்ல்ட் பள்ளியில் கல்வி அறிவியல் கண்காட்சி
தங்கம் வேர்ல்ட் பள்ளியில் கல்வி அறிவியல் கண்காட்சி
ADDED : டிச 26, 2024 01:30 AM
சேலம், டிச. 26-
சேலம் தங்கம் வேர்ல்ட் பள்ளியில், மாணவ, மாணவியரின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக, 'கான்கிளேவ்' 24 பெயரில், இரு நாள் கல்வி அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி நிறுவனர் ஜெகதீசன், இயக்குனர் ராஜா, முதல்வர் மவுமிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இன்றைய குழந்தைகளின் தலைமை பண்புகள், திறன் மேம்படுத்தல், வாட்ஸாப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை மீட்க விழிப்புணர்வு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், எதிர்காலத்தில் சிறந்த தொழில் முனைவோராகவும், நல்ல சிந்தனையோடு வெற்றி பெற வழிகாட்டியாகவும், இந்நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு கல்வியாளர்கள், சமூக சிந்தனை பேச்சாளர்கள், தொழில் முனைவோர்கள், பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதன்மூலம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொறுப்புள்ள குடிமகன்களாகவும், நம் நாகரிகம், பண்பாடு அறிந்து கொள்ளவும் உதவியது. இத்துடன் தங்கம் வேர்ல்ட் பள்ளி மாணவ மாணவியரின் திறன்களை வெளிப்படுத்த, கல்வி அறிவியல் கண்காட்சியும் நடந்தது.
ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர் பார்வையிட்டனர்.
பள்ளியுடன், யங் இண்டியன்ஸ், ரவுண்ட் டேபிள் இண்டியா, சேலம் சகோதா பள்ளி வளாகம், சி.பி.எஸ்.இ., பள்ளி, மேனேஜ்மென்ட் அசோசியேஷன், ரேடியோ பார்ட்னர் சூர்யன் எம்.எம்., 93.5, ஈவன்ட், பிராண்டிங் பார்ட்னர் விமிமேஜிக் ஆகியவையும் இணைந்து சிறப்பித்தன.

