/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்தூர் அருகே இரு தரப்பினர் மோதலில் போலீஸ் ஏட்டு மண்டை உடைப்பு
/
ஆத்தூர் அருகே இரு தரப்பினர் மோதலில் போலீஸ் ஏட்டு மண்டை உடைப்பு
ஆத்தூர் அருகே இரு தரப்பினர் மோதலில் போலீஸ் ஏட்டு மண்டை உடைப்பு
ஆத்தூர் அருகே இரு தரப்பினர் மோதலில் போலீஸ் ஏட்டு மண்டை உடைப்பு
ADDED : பிப் 06, 2024 12:13 AM

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் ஒரு தரப்பினர், ஒரு சமுதாயம் குறித்து இன்ஸ்டாகிராமில் தவறாக பதிவிட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மற்றொரு தரப்பினர், ஆத்தூர் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து மற்றொரு தரப்பை சார்ந்த நபர் மதுபோதையில் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
இரவு, 9:00 மணியளவில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது.
தகவலறிந்த ஆத்தூர் ஊரக போலீஸ் எஸ்.ஐ., தினேஷ்குமார் தலைமையில் வீரகனூர், ஆத்தூர் தலைவாசல் உள்ளிட்ட ஸ்டேஷன் போலீஸார்கள் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே இரு தரப்பினரும் அங்கிருந்த செங்கல் மற்றும் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரகனூர் ஸ்டேஷன் ஏட்டு முருகவேல், 40, என்பவரது மண்டை உடைந்தது. அதேபோல் இருதரப்பை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த சேலம் எஸ்.பி., அருண் கபிலன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் கல்பகனூர் கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆத்தூர் ஆர்.டி.ஓ., ரமேஷ், தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய் துறையினரும் இருதரப்பினர் கலவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருதரப்பு மோதல் காரணமாக, கல்பகனூர் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

