/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'இ.பி.எஸ்.,க்கு ஆலோசனை வழங்கியவர் இளங்கோவன்'
/
'இ.பி.எஸ்.,க்கு ஆலோசனை வழங்கியவர் இளங்கோவன்'
ADDED : அக் 21, 2024 07:10 AM
மேட்டூர்: கொளத்துாரில் ஒன்றிய, பேரூர் செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் முன்னாள் அமைச்சர், மாநில விவசாய பிரிவு செயலர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:செயல் வீரர்கள் கூட்டத்தை, 234 தொகுதிகளிலும் மாநகர, நகர, ஒன்றிய அளவில் நடத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு வழங்கியது, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன்தான்.
அவர் ஆலோசனைப்படி மாநிலம் முழுதும் செயல் வீரர்கள் கூட்டம் நடக்கிறது. கட்சியில் கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க, கிளை நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், ''கட்சி வளர்ச்சிக்கு கிளை நிர்வாகிகள் தேவை. அவர்கள் தான் கட்சியின் முதுகெலும்பு. 2026ல் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும். அதற்கு கிளை நிர்வாகிகள், கட்சியில் குறைந்தபட்சம், 5 இளைஞர்களை சேர்க்க வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, கிளை நிர்வாகிகள் பலர் கட்சி வளர்ச்சிக்கான மாற்றங்கள் குறித்து பேசினர். பேரூர் செயலர் ராஜரத்தினம், கொளத்துார் கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலர்கள் செல்வராஜ், சுப்ரமணி, கொளத்துார் ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் மேட்டூர் நகராட்சியில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.