/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருமணத்துக்கு சென்றபோது கார் மோதி முதியவர் பலி
/
திருமணத்துக்கு சென்றபோது கார் மோதி முதியவர் பலி
ADDED : நவ 03, 2025 02:16 AM
ஆத்துார்:ஆத்துார், வ.உ.சி., நகரை சேர்ந்தவர் பச்சமுத்து, 70. இவரது நண்பர், தெற்குகாட்டை சேர்ந்த தமிழரசு, 70. இவர்கள், தென்னங்குடிபாளையத்தில் உள்ள மண்டபத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று இரவு, 7:30 மணிக்கு, ஆத்துார் புறவழிச்சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் பச்சமுத்து ஓட்டினார்.
மண்டபம் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த, 'வோல்க்ஸ்வேகன்' கார், மொபட் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பச்சமுத்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தமிழரசு படுகாயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

