/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இயற்பியல் உபகரணங்களுடன் தயாராகும் அறிவியல் பூங்கா
/
இயற்பியல் உபகரணங்களுடன் தயாராகும் அறிவியல் பூங்கா
ADDED : நவ 03, 2025 02:17 AM
சேலம்:சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம், 9வது வார்டு வாய்க்கால்பட்டறை வர்மா கார்டனில் பூங்கா அமைக்க, 97,669 சதுர அடி நிலம், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் கொண்ட, அந்த இடத்தில் மாநகராட்சி பொது நிதி, 1 கோடி, சிறப்பு திட்டங்கள் நிதி, 2 கோடி என, 3 கோடி ரூபாய் மதிப்பில் அறிவியல் பூங்கா கட்டுமான பணி, 4 மாதங்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது.
அங்கு இயற்பியல் சூத்திரங்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு எளிய முறையில் புரியும்படி, 62 வகை செயல்முறை உபகரணங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு உபகரண பெயர், செயல்படும் விதம், அன்றாட வாழ்க்கையில் அதற்கான தேவை குறித்து விரிவான விளக்கங்கள் எழுதி வைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அறிவியல் பூங்கா உபகரணங்களை மாணவர்கள், மக்கள் இயக்கி பார்த்து அது செயல்படும் விதத்தை தெரிந்து கொள்ளலாம்.

