ADDED : நவ 03, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருக்குறளை எளிய முறையில் கற்பித்தல் குறித்து பயிற்சி கூட்டம், 4ம் வாரமாக, ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செவ்வேள் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரம், திருக்குறள் எளிய முறையில் கற்பித்தல், அதன் பொருள் விளக்கம் குறித்து எடுத்துரைத்தார். தமிழ் ஆசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பயிற்சி வகுப்பு தொடர்ந்து, 30 வாரங்களுக்கு, சனிதோறும் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், மக்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

