ADDED : ஜன 20, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டி அருகே மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை, 56. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பைக்கில், காரிப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
இரவு, 10:30 மணிக்கு, மாசிநாயக்கன்பட்டியில் வந்தபோது, சேலத்தில் இருந்து வாழப்பாடி நோக்கி, எதிரே சென்ற அரசு டவுன் பஸ் மோதியதில் சின்னதுரை சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.