/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி
/
மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி
ADDED : மே 26, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்:தாரமங்கலம், பவளத்தானுார் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்-தவர் தர்மலிங்கம், 75. இவரது மனைவி இறந்துவிட்டார். இரு மகன்களும், சென்னையில் வசிக்கும் நிலையில், தர்மலிங்கம், உற-வினர் உதவியுடன் முகாமில் வசித்தார்.
கடந்த, 12ல் மின்தடை ஏற்பட்டதால், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு துாங்கியுள்ளார். அப்போது, மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு பற்றி எரிந்தது. இரு கால்களிலும் படுகாயம் ஏற்-பட்டு கூச்சலிட்ட அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.