ADDED : ஜூன் 20, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், செல்லியம்பாளையம், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 80. கயிறு திரிக்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று காலை, 10:00 மணிக்கு, கொத்தாம்பாடியில் இருந்து, 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல், செல்லியம்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பழனியாபுரி பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து ஆத்துார் நோக்கிச்சென்ற, 'ஸ்விப்ட்' கார், மொபட் மீது மோதியது. இதில் மாணிக்கம், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.