/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கழுதை குறுக்கே ஓடியதால் பைக்கிலிருந்து விழுந்த முதியவர் பலி
/
கழுதை குறுக்கே ஓடியதால் பைக்கிலிருந்து விழுந்த முதியவர் பலி
கழுதை குறுக்கே ஓடியதால் பைக்கிலிருந்து விழுந்த முதியவர் பலி
கழுதை குறுக்கே ஓடியதால் பைக்கிலிருந்து விழுந்த முதியவர் பலி
ADDED : பிப் 04, 2025 06:45 AM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த விசுவாசம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த-சாமி, 87, விவசாயி. கடந்த 31ல், இவரும், திருப்பத்துார் மாவட்டம் கோடியூரை சேர்ந்த மாதையன், 55, என்பவரும் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளனர்.
பைக்கை மாதையன் ஓட்-டினார். சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், செங்கம் - ஊத்தங்கரை
சாலையில் சென்றபோது, குறுக்கே கழுதை ஒன்று வந்துள்ளது. திடீரென பிரேக் பிடிக்க முயன்றதால்,
கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் கவிழ்ந்ததில், இரு-வரும் சாலையில் விழுந்தனர். இதில்
படுகாயமடைந்த கோவிந்த-சாமி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்ட நிலையில்
நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு உயிரி-ழந்தார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.