ADDED : டிச 31, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: சாலையை கடக்க முயன்ற முதியவர், கார் மோதி பலியானார்.
ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடி நேருஜி வீதியை சேர்ந்தவர் வையாபுரி, 80, இவரது சகோதரர் மாணிக்கம், 48. இருவரும் நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானாவில் சாலையை கடக்க முயன்றனர்.அப்போது நைனாம்பட்டியை சேர்ந்த சசிகுமார், 35, என்பவர் டாடா விஸ்டா காரில் ஆட்டையாம்பட்டியில் இருந்து, திருச்செங்கோட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். சாலையை கடக்க முயன்ற வையாபுரி மீது, எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.