/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காட்டுப்பன்றி வேட்டையாடிய முதியவருக்கு ரூ.80,000 அபராதம்
/
காட்டுப்பன்றி வேட்டையாடிய முதியவருக்கு ரூ.80,000 அபராதம்
காட்டுப்பன்றி வேட்டையாடிய முதியவருக்கு ரூ.80,000 அபராதம்
காட்டுப்பன்றி வேட்டையாடிய முதியவருக்கு ரூ.80,000 அபராதம்
ADDED : நவ 22, 2024 06:47 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி, வீரகனுார் வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதாக புகார் எழுந்தது. இதனால் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வீரகனுார் ஏரிக்கரையில் இறைச்சி விற்ற தங்கவேல், 64, என்பவரை பிடித்தனர். அவரிடம், 10 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக, தங்கவேலுவை கைது செய்தனர். அவருக்கு, 80,000 ரூபாய் அபராதம் விதித்து, ஆத்துார் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ்சேவியர் உத்தரவிட்டார்.
எறும்புத்தின்னி மீட்பு
வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டி, புதுாரில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு எறும்புத்தின்னி இருப்பதை பார்த்து மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து மீட்டுச்சென்று வனப்பகுதியில் விட்டனர்.