ADDED : செப் 19, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு :ஏற்காடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 65. நேற்று ஏற்காடு ஆர்.சி சர்ச் அருகே தனியார் பள்ளி முன், பேரனை அழைத்துச்செல்ல காத்திருந்தார்.
அப்போது ஒரு மாடு, லட்சுமணனை முட்ட முயன்றது. பயந்து ஓடிய லட்சுமணன், 8 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் சாலையில் விழுந்தார். அதில் மயக்கம் அடைந்தார்.
ஆம்புலன்ஸ் மூலம், ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது வலிப்பு வந்ததால், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, மக்கள் வலியுறுத்தினர்.