/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே ஸ்டேஷனில் முதியவர் சடலம் மீட்பு
/
ரயில்வே ஸ்டேஷனில் முதியவர் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 08, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் ரயில்வே ஸ்டேஷனில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, பயணியர் விசாரணை அலுவலகம் முன், ஒருவர் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார் விசாரணையில், அவரது பெயர் பழனிசாமி, 65, என தெரிந்தது. ஆனால் முகவரி, தொடர்பு எண் தெரியாததால், சேலம் அரசு மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிற கோடு போட்ட அரைக்கை சட்டை, நீலம், பச்சை, வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கி அணிந்துள்ளார். அடையாளம் தெரிந்தவர்கள், 0427 - 2447404 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என, போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.