/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சமுதாயக்கூடம் கட்ட முதியவர் எதிர்ப்பு: பொக்லைன் அடியில் படுத்து போராட்டம்
/
சமுதாயக்கூடம் கட்ட முதியவர் எதிர்ப்பு: பொக்லைன் அடியில் படுத்து போராட்டம்
சமுதாயக்கூடம் கட்ட முதியவர் எதிர்ப்பு: பொக்லைன் அடியில் படுத்து போராட்டம்
சமுதாயக்கூடம் கட்ட முதியவர் எதிர்ப்பு: பொக்லைன் அடியில் படுத்து போராட்டம்
ADDED : ஜன 11, 2024 11:06 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சி குள்ளப்பநாயக்கனுார் சந்தைப்பேட்டையில், பார்லிமென்ட் தொகுதி மேம்பாட்டு நிதி, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்ட, அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று காலை அங்கு சமுதாயக்கூடம் கட்டும் இடத்தை, 'மார்க்' செய்து, துாண் அமைக்க பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.
ஆனால் காலை, 11:30 மணிக்கு, குள்ளப்பநாயக்கனுாரை சேர்ந்த சவுந்திரராஜன், 75, சமுதாயக்கூடத்தை இங்கு கட்ட கூடாது என, பொக்லைன் அடியில் படுத்துக்கொண்டார்.
பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் நடேசன், மல்லுார் இன்ஸ்பெக்டர் கலையரசி, துணை பி.டி.ஓ., முத்துகுமார் பேச்சு நடத்தினர். பின் போராட்டத்தை கைவிட்டு எழுந்தார். தொடர்ந்து சந்தைப்பேட்டை நிலத்தை வருவாய்த் துறையினர் அளவீடு செய்தனர். பின் சமுதாயக்கூடம்
கட்டுமான பணி தொடங்கியது.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், 'வாரச்சந்தை நடக்கும் இடத்தில், சமுதாயக்கூடம் கட்டினால் இடையூறாக இருக்கும். வேறு இடத்தில் கட்ட, சவுந்திரராஜன் தெரிவித்தார். ஒன்றிய நிலம் என்பதால் சமுதாயக்கூடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுமான பணி நடக்கிறது' என்றனர்.
போலீசார் கூறுகையில், 'போராட்டத்தில் ஈடுபட்டவரின் வணிக கடைகள், சந்தைப்பேட்டை அருகே உள்ளது. அதனால் சமுதாயக்கூடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார்' என்றனர்.