/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பசுவுடன் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
/
பசுவுடன் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
ADDED : பிப் 20, 2025 07:13 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மனைவி பாஞ்சாலை, 60. விவசாயியான இவர், நேற்று பசு-மாட்டின் கயிற்றை பிடித்துக்கொண்டு, அதே பகுதியில் மேய்ச்ச-லுக்கு சென்றார். மதியம், 12:35 மணிக்கு, அங்குள்ள கிணறு அருகே சென்ற பசுமாடு கால் இடறி கிணற்றில் விழுந்தது. கயிற்றை பிடித்திருந்த பாஞ்சாலையும், 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்தார்.
இதுகுறித்து கிடைத்த தகவல்படி, 25 நிமிடத்தில் அங்கு சென்ற ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், பாஞ்சாலையையும், பசுமாட்-டையும் கயிறு மூலம் உயிருடன் மீட்டனர். உடனே ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி அளித்து, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.