/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட்டில் சென்றபோது மயக்கம்; விழுந்த மூதாட்டி சாவு
/
மொபட்டில் சென்றபோது மயக்கம்; விழுந்த மூதாட்டி சாவு
மொபட்டில் சென்றபோது மயக்கம்; விழுந்த மூதாட்டி சாவு
மொபட்டில் சென்றபோது மயக்கம்; விழுந்த மூதாட்டி சாவு
ADDED : நவ 20, 2025 01:57 AM
ஓமலுார், : ஓமலுார், பெரியேரிப்பட்டி துண்டுமானியத்தை சேர்ந்தவர் பழனியப்பன், 65. இவரது முதல் மனைவி இறந்ததால், இரண்டாவதாக ஜானகி, 50, என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நேற்று ஜானகிக்கு உடல நிலை சரியில்லை. அவரை, அவரது இளைய மகள் மகேஸ்வரி, 'ஸ்கூட்டி' மொபட்டில் அழைத்துக்கொண்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டார். காலை, 10:00 மணிக்கு தானாங்காட்டூரில் சென்றபோது, ஜானகி மயக்கம் வந்து, வண்டியில் இருந்து விழுந்துள்ளார்.
இதில் காயம் அடைந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.