/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தெப்பக்குளத்தில் விழுந்து மூதாட்டி சாவு
/
தெப்பக்குளத்தில் விழுந்து மூதாட்டி சாவு
ADDED : அக் 17, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம், சரவண குப்பண்ணமுதலி தெருவை சேர்ந்தவர் சம்பூரணம், 73. தம்பி சக்திவேலுடன் வசித்து வந்தார். இரு வாரங்களுக்கு முன், கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிந்து அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, துாங்கச்சென்ற அவரை, நேற்று காலை காணவில்லை. சக்திவேல் பல்வேறு இடங்களில் தேடினார். இந்நிலையில் தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் தெப்பக்குளத்தில், ஒரு மூதாட்டி இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்க, அங்கு சென்ற சக்திவேல் பார்த்தபோது, அக்கா சம்பூரணம் என தெரிந்தது. உடல் வலியால் மனமுடைந்து இறந்திருக்கலாம் என, சக்திவேல் புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.