ADDED : அக் 17, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் ரயில்வே போலீசார், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று காலை சோதனை செய்தனர்.
முன்பதிவற்ற பொதுப்பெட்டி கழிப்பறை அருகே, ஒரு பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, 17 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா கடத்தி வந்தவர்கள் உள்ளனரா என, அந்த பெட்டியில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, கஞ்சாவை, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.