ADDED : மே 03, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்:தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர், சுப்ரமணியர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி, 80. இவர், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வீடு முன் இருந்த குப்பையை அகற்றி, அருகே உள்ள மகன் பன்னீர்செல்வம் வீடு முன் கொட்டி தீ வைத்தார்
. அப்போது ரங்கநாயகி சேலையில் தீப்பற்றியது. இதில் அலறித்துடித்த அவரை, மக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். பன்னீர்செல்வம் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.