/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி கால்கள் நசுங்கின
/
அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி கால்கள் நசுங்கின
அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி கால்கள் நசுங்கின
அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி கால்கள் நசுங்கின
ADDED : டிச 30, 2024 02:41 AM
வாழப்பாடி: பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமண்ணன் மனைவி பெருமாயி, 80. இவர், வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின் வீட்டுக்கு செல்ல, சிங்கிபுரம் பஸ் ஸ்டாப் அருகே, நேற்று காலை, 10:45 மணிக்கு நின்றார். அப்போது தம்மம்பட்டியில் இருந்து வாழப்பாடி நோக்கி வந்த, அரசு பஸ்சில் ஏற முயன்றபோது, தடுமாறி விழுந்ததில், பின்புற சக்கரத்தில் மூதாட்டியின் இரு கால்களும் சிக்கி நசுங்கின.
வாழப்பாடி போலீசார், மூதாட்டியை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவரது பேரன் ராமகிருஷ்ணன் புகார்படி, டிரைவர் குணாளன், 40, கண்டக்டர் ராமர், 44, ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்-றனர். போலீசார் கூறுகையில், 'மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பஸ்சில் ஏற முயன்றபோது, பெருமாயி கால்கள் பின் சக்கரத்தில் சிக்கி நசுங்கியுள்ளன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்-றனர்.