/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டி கொலை: 20 'சிசிடிவி' காட்சிகள் ஆய்வு
/
மூதாட்டி கொலை: 20 'சிசிடிவி' காட்சிகள் ஆய்வு
ADDED : மே 23, 2025 01:30 AM
ஓமலுார், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா கூக்குட்டப்பட்டி ஊராட்சி சின்னேரிகாட்டை சேர்ந்தவர் சரஸ்வதி, 70. இவர் கடந்த, 20ல் மாடு மேய்க்க, வீடு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றபோது, காது, மூக்கு அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணையில், நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.
இதுதொடர்பாக ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இரு நாட்களாக விசாரணை நடக்கிறது. இந்நிலையில், 20க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., பாலகுமார், இந்த வழக்கு தொடர்பாக, தீவட்டிப்பட்டி ஸ்டேஷனில் விசாரணை மேற்கொண்டார்.