/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அறங்காவலர் தலைவர் முதன்முறை தேர்வு
/
அறங்காவலர் தலைவர் முதன்முறை தேர்வு
ADDED : செப் 24, 2024 07:37 AM
மேட்டூர்: மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கால்வாய் கரையோரம் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரிய பத்ரகா-ளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை சேலம் உதவி ஆணையர் ராஜா தலைமையில், கோவில் வளாகத்தில் முதன்முறையாக நேற்று காலை அறங்காவலர் குழு தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்-தது. ஆய்வாளர் கல்பனாதத், மேட்டூர் ஞானதண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலர் மாதேஷ் முன்னிலை வகித்தனர்.
அவர்கள் முனு அறங்காவலர் குழு தலைவரை தேர்வு செய்வதற்-காக ஓட்டு பெட்டி இருந்தது.அறங்காவலர்கள் விஜயகுமார், நடேசன், பிரியா, ரகுணன், தன-கோடி ஆகிய ஐந்து பேர் ஓட்டு போட்டனர். இதில், தலைவராக விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக உதவி ஆணையர் ராஜா அறிவித்தார்.