ADDED : நவ 21, 2025 03:15 AM
நங்கவள்ளி, நங்கவள்ளி அருகே வனவாசியில், பா.ஜ.,வின், சேலம் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமை வகித்தார்.
அதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
எஸ்.ஐ.ஆர்., குறித்து தி.மு.க.,வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே நேரம், பி.எல்.ஓ.,வுடன், தி.மு.க.,வினர் வீடுதோறும் செல்கின்றனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு தலைமை வகிக்கும் இ.பி.எஸ்.,சின் சொந்த மாவட்டமான சேலம் முதன்மை மாவட்டம். அதனால் அனைவரும் தேர்தல் பணியில் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, சவுந்தரராஜன், சுதிர்முருகன், பொதுச்செயலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

