/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்கழக ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
/
மின்கழக ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்கழக ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்கழக ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
ADDED : பிப் 13, 2024 10:44 AM
மேட்டூர்: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மின்கழக ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
மாநிலம் முழுவதும் தமிழக மின் உற்பத்தி, வினியோக பிரிவில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், 15 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்றால் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்வோம் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது.
வெற்றி பெற்ற பின்பு இன்னமும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பணியின் போது இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டூர் அனல்மின் நிலைய, மின் வினியோக வட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அனல்மின் நிலையம் முன் நேற்று நடந்த போராட்டத்தில், அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில், மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மேட்டூர் ராஜா, செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ராஜா, பொருளாளர் சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.