/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் மின் சீரமைப்பு பணி
/
ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் மின் சீரமைப்பு பணி
ADDED : ஆக 27, 2025 01:52 AM
ஆத்துார், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்ட, மாவட்ட சிறை, வங்கதேசத்தினர் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது, 81 பேர் உள்ளனர். அங்கு சில நாட்களுக்கு முன், மின் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் இருள் சூழ்ந்தது. இதனால் தாலுகா அலுவலக மின் இணைப்பில் இருந்து ஒயர் அமைத்து, வங்கதேச முகாமுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது.
ஆனால் அங்குள்ளவர்கள், மின்சார அடுப்பு பயன்படுத்துவதால், தாலுகா அலுவலக மின் இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தாலுகா அலுவலக வெளிப்புறம், மற்ற பிரிவு அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த, 24ல், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று முன்தினம், ஆத்துார் மின்வாரிய பணியாளர்கள், மின் இணைப்பு சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து வங்கதேச சிறப்பு முகாம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் மின் வினியோகம் வழங்கப்பட்டது.
ஒயர் மூடல்
அதேபோல் தாசநாயக்கன்
பட்டி பெருமாள் கோவில் அருகே ஊராட்சி ஆழ்துளை குழாய் கிணறு மோட்டாருக்கு மின்சாரம் செல்லும் ஒயர், தரையில் கிடப்பதால் மின் விபத்தில் மக்கள் சிக்கும் அபாயம் இருந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தாசநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம், மின் ஒயரை, பி.வி.சி., பைப் போட்டு, பாதுகாப்பாக மூடி வைத்தனர்.