ADDED : நவ 25, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, இடைப்பாடி அருகே புதுப்பட்டியை சேர்ந்த உத்திரசாமி மகன் திருமூர்த்தி, 28. இவர், பவானியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம், நண்பர் கவியரசனுடன் ஸ்பிளண்டர் பைக்கில் இளம்பிள்ளை சென்று விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். பைக்கை கவியரசன் ஓட்டி வந்துள்ளார். இரவு 8:00 மணிக்கு மங்கரங்கம்பாளையம் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற பைக் மீது கவியரசன் ஓட்டி சென்ற பைக் மோதியது.
இதில் பின்னால் உட்கார்ந்து வந்த திருமூர்த்தி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்தகாயம் அடைந்த கவியரசனும், மற்றொரு பைக்கில் சென்றவரும், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

